டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியதால் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற 10-வது டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நியூசிலாந்து அணி இரண்டாமிடமும், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை அரையிறுதியுடன் வெளியேறின.
இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என ஒரேயொரு புள்ளியுடன் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகியது.
உலகக் கோப்பைத் தொடரில் பாதியில் விலகியதால், கேப்டன் சல்மான் அலி அகா, சாஹிப்சதா ஃபர்ஹான், உஸ்மான் தாரிக் உள்ளிட்ட வீரர்களைத் தவிர மற்ற வீரர்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், ஊடகங்கள் வழியாக பரவியத் தகவல்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஆமிர் மிர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. விதிக்கப்படுவது குறித்து எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், நிறைய சம்பாதிக்கும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தான் அணியின் ஒவ்வொரு வீரரும் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 6-7 கோடி வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதனால், அபராதம் விதிக்கவும் பரிசீலனைகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
Summary
Reports had emerged earlier that every player of Pakistan's T20 World Cup 2026 squad would have to pay a hefty fine after their underwhelming performance in the tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்!

முதல் பாதிக்குப் பிறகு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட பிரான்ஸ் - இராக் போட்டி..! உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை!

15 கோல்களைத் தடுத்து, உலகச் சாதனையில் இடம்பிடித்த கோல்கீப்பர்!

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




