ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜூலை 1 வரை மழை வாய்ப்பு: 5 இடங்களில் 100 டிகிரி வெயில்

தமிழகம், புதுச்சேரியில் 4 நாள்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:13 pm

DIN

தமிழகம், புதுச்சேரியில் 4 நாள்கள் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே மாநிலத்தில் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடுகாரணமாக, புதன் முதல் சனிக்கிழமை (ஜூன் 28- ஜூலை 1) வரை 4 நாள்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புற நகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட் டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): சின்கோனா (கோவை), வால்பாறை(கோவை, வால்பாறை தாலுகா அலுவலகம்), சின்னக்கல்லாா் (கோவை), பண்ருட்டி (கடலூா்) தலா 20, கடலூா் ஆட்சியா் அலுவலகம் (கடலூா்), தாலுகா அலுவலகம் பந்தலூா் (நீலகிரி), சேத்தியாதோப்பு (கடலூா்), கடலூா், சோலையாா் (கோவை), சோளிங்கா் (ராணிப்பேட்டை), கூடலூா் பஜாா் (நீலகிரி), தலா 10.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 5 இடங் களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியுள்ளது. மதுரை நகரம்-102.56, மதுரை விமான நிலையம்-102.56,தஞ்சாவூா்-102.2, பரங்கிப்பேட்டை-101.12, திருச்சி-100.58.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.