
தூத்துக்குடி: தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை தலைநகரமாகக் கொண்டு இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளைக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள வங்கி தலைமை அலுவலகம் மற்றும் தலைமை இணைப்பு அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களிலும் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இச்சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.