காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பக்ரீத் பண்டிகை: தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனர்.

News image
Updated On :29 ஜூன் 2023, 1:23 pm IST

தூத்துக்குடி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஈத்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வியாழக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனர்.

இறைதூதர் இப்ராஹீம் தியாகத்தை போற்றும் வகையில்  தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Story image

இந்தப் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம் தலைமையில்  சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அன்பு, சகோதரத்துவம் உலக அமைதி வேண்டி நடைபெற்ற இந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப் பின் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.