டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

News image

சமீர் ரிஸ்வி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :5 மே 2026, 9:38 pm IST

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சிஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்கள், பதும் நிசங்கா 19 ரன்கள், நிதீஷ் ராணா 15 ரன்கள், அஷுத்தோஷ் சர்மா 14 ரன்கள், கருண் நாயர் 13 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நூர் அகமது இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அகீல் ஹொசைன், முகேஷ் சௌதரி, குர்ஜப்நீத் சிங் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

In the IPL match against Chennai Super Kings, Delhi Capitals, batting first, scored 155 runs for the loss of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.