ஈரோடு கிழக்கு: டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டது அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், டெபாசிட் தொகையை அதிமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஈரோடு கிழக்கு: டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டது அதிமுக
ஈரோடு கிழக்கு: டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டது அதிமுக

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், டெபாசிட் தொகையை அதிமுக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 48 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பகுதியில் திடீரென இணைசேவை பாதிப்பால் அதிகாரப்பூர்வ முடிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் இடத்தில் கூடுதல் கணினிகளை வைத்து அடுத்தடுத்து சுற்று முடிவுகளை விரைவாக வெளியிட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட் தொகையை பெற ஒரு வேட்பாளர் குறைந்தது 26,365 வாக்குகள்  பெற வேண்டும். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்றிருப்பதால் டெபாசிட் தொகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 48 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்ட நிலையில், சுமார் 75 பேர் வரை டெபாசிட் தொகையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com