ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி, அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2023, 4:50 pm

DIN

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கில்  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவை 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து பல சுற்றுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

Story image

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.6 சதவிகித வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 25.8 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார். 

தேர்தலில் போட்டியிட்ட மற்றக் கட்சிகள் 8.32 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றுள்ளன. 798 வாக்குகள் நோட்டாவிற்கு சென்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.