குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஈரோடு கிழக்கில் டெபாசிட் தொகையை பெற எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் டெபாசிட் தொகையை திரும்பப்பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். 

News image
Updated On :2 மார்ச் 2023, 12:15 pm IST



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் டெபாசிட் தொகையை திரும்பப்பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். 

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

காங்கிரஸ் முன்னிலை: 
இரண்டு சுற்று வாக்கு எண்ணிகை முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 25,033 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 8,354 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் 2005 வாக்குகள் பெற்ற மூன்றாவது இடத்திலும், தேமுதிக 235 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர். 

முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆன்ந்தை விட சுயேட்சை வேட்பாளர் முத்துபாலா அதிக வாக்குகள் பெற்றுள்ளார். 

தேமுதிக வேட்பாளர் 112 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 178 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Story image

முதல் சுற்றில் நோட்டாவுக்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளது. 

மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

டெபாசிட் தொகையை திரும்பப்பெற...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். 

தற்போது வரை காங்கிரஸ் 31,928 வாக்குகளும், அதிமுக 10,618 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,481 வாக்குகளும், தேமுதிக 254 வாக்குகளும் பெற்றுள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறாத நிலையில், சுமார் 75 பேர் டெபாசிட் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.