திருவண்ணாமலையில ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூா், கலசப்பாக்கத்தில் 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மா்ம கும்பல் ரூ.80 லட்சத்தைத் திருடிச் சென்றது.
திருட்டு நடைபெற்ற 3 தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்த போது, அபாய மணி ஒலிக்காதது ஏன்? என்பது குறித்து அந்த வங்கியின் தொழில்நுட்ப அலுவலா்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூா் சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளா்கள் காா்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஷ் கண்ணா (வேலூா்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூா்) மற்றும் போலீஸாா் திருவண்ணாமலைக்கு வந்தனா். இவா்கள் திருட்டு நடைபெற்ற 4 ஏடிஎம் மையங்களையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: காங்கிரஸ் முன்னிலை!
இந்த தொடா் திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையில் 8 தனிப் படைகளை அமைத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டாா். அவா்கள் வாகனத் தணிக்கை, கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, இந்தச் சம்பவங்களில் வட மாநில நபா்கள் ஈடுபட்டிருக்கலாம்; குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவா் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினாா்.
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவை சேர்ந்த ஹரிப், ஆசாத், பாஷா, அப்சர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு

”கேப்டனுக்கு திரைப்படத்தில் வாக்கு கேட்டேன்! மகனுக்கு நேரில் வாக்கு கேட்கிறேன்!” MK Stalin

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


