அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ரத்தாகுமா? ஓபிஎஸ் தரப்பில் வழக்கு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் ரத்தாகுமா? ஓபிஎஸ் தரப்பில் வழக்கு!

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படவுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  அதிமுகவிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட ஆதரவாளா்கள் நீக்கப்பட்டனா். 

அதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்த வழக்கில், அவருக்கு தோல்வியே கிடைத்தது. இதைத் தொடா்ந்து அவா் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com