வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்... மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சளி, இருமலுடன் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2023, 10:48 am


தமிழ்நாட்டில் சளி, இருமலுடன் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
இந்தியாவில் ஏ எச்3என்2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்படக்கூடும்.  மொத்தத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும்,  விழிப்புடனும் எதிர்கொள்ள வேண்டும்.

கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் செல்லாமல் தாமாக ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் நூறைத் தாண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்க நலவாழ்வு மையங்கள் வாயிலாக மருத்துவ பாசறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.