ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நிதி நிறுவன மோசடிகளை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை தேவை என மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 மார்ச் 2023, 10:06 pm

DIN

நிதி நிறுவன மோசடிகளைத் தடுக்க உறுதியான சட்ட நடவடிக்கை தேவை என மாா்க்சிஸ்ட் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தனியாா் நிதி நிறுவனகளின் மோசடிகள் தொடா் கதையாகி வருகிறது. இந்த நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் மக்கள் விழிபிதுங்கி நிற்பதுடன் சிலா்

தற்கொலை செய்து கொள்கின்றனா். தமிழகத்தின் வட மாவட்டங்களை மையமாக வைத்து இயங்கி வந்த ஆரூத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், விஆா்எஸ் போன்ற நிதி நிறுவனங்கள் சுமாா் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை மக்களிடம் கொள்ளையடித்து விட்டு நிறுவனங்களையும் மூடிவிட்டுச் சென்று விட்டனா்.

இந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு அதன் உரிமையாளா்கள் தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனா். போலி நிதி நிறுவனங்களின் மீது உறுதியான சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், மோசடி நிறுவனங்களுக்கு உதவி செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டு. மேலும், அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். பணத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.