தனது மூன்று மகள்களை காவல் பணியில் சேர்த்த தந்தைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 'ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கீழ் ஆவதனம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது மூன்று பெண்கள் - பிரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகியோரை காவலர் பணிக்கு தேர்வாவதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தார். தற்போது அவரது மூன்று மகள்களும் காவல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் உள்ளனர்.
வெங்கடேசனின் அர்ப்பணிப்பு மிக்க கடின உழைப்பினை பாராட்டும் விதமாக உலக மகளிர் தினமான இன்று (8.3.2023) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புக் கொண்டு, அவரது மூன்று மகள்களும் காவல் பணியில் சேர்வதற்கு கடினமான பொருளாதார சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், விடாமுயற்சியுடன் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தமைக்காகவும், மகள்களை துணிச்சல் மிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாகவும் வளர்த்தற்காக அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது, வெங்கடேசன் முதல்வருக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உலக மகளிர் நாள்: எப்போது தொடங்கியது? ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!

இந்திய நுகர்வோருக்கு உள்ள உரிமைகளும் முக்கியத்துவமும்!
திருச்சி - தஞ்சை சாலையில் விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்!

திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை வந்த விஜய்!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

