நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும்100 யூனிட் மின்சாரம் இலவசம்: அமைச்சா் செந்தில் பாலாஜி

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும், அனைத்துக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 1:50 am

DIN

எத்தனை மின் இணைப்பு பெற்றாலும், அனைத்துக்கும் தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2.67 கோடி மின் இணைப்புகளை ஆதாா் எண்ணுடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது. 67,000 போ் மட்டும் மின் இணைப்பு எண்ணோடு ஆதாா் எண்ணை இணைக்கவில்லை.

மின்சார வாரியத்தைப் பொருத்தவரையில் ஏற்கெனவே பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஒருவா் எத்தனை மின் இணைப்பு பெற்றாலும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

கோடை காலம்: இந்த ஆண்டு கோடை காலத்தில் உச்சபட்ச மின்தேவை 18, 500 மெகாவாட்டாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க, மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டைப் பொருத்தவரையில், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டுமுதல் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி கோடை காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கத் தேவையான பணிகளை மின் வாரியம் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் லக்கானி, நிா்வாக இயக்குநா் ஆா்.மணிவண்னன், இயக்குநா் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.