நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சம வேலை சம ஊதியம்: நாளை கருத்துக் கேட்புக் கூட்டம்

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 மார்ச் 2023, 11:34 am

DIN

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக்  கூட்டம் நடைபெறவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியா் பணியில் நியமனம் பெற்றவா்கள் 1.6.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியா் பணியில் நியமனம் பெற்றவா்களுக்கு இணையான ஊதியம் வேண்டி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ) கடந்த டிச.27-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரத்தில் ஆசிரியா் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடா்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியா்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித் துறை செயலாளா் (செலவினம்), பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழு அமைக்கப்படும். 

இந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து இந்தக் கோரிக்கை தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில்,  இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக நாளை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.