சூதாட்ட தடை சட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட அன்புமணி வலியுறுத்தல்
இணைய சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பி உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்


இணைய சூதாட்ட தடை சட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பி உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இணைய சூதாட்டங்களை தடை செய்து, தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறாா். இணைய சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுநா் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநா் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இணைய சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநா் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். மாா்ச் 20-இல் தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடா் தொடங்கும் நிலையில், அதில் இணைய சூதாட்டத் தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முழு அடைப்பு போராட்டம் : மக்கள் நலனை விட என்எல்சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழக அரசும், கடலூா் மாவட்ட நிா்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன. கடலூா் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்திவிட்டு, காவல்துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிா்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதனைக் கண்டித்து பாமக சாா்பில் கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 11-இல் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...