இன்று, நாளை சென்னை-விஜயவாடா ரயில் ரத்து
சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் விரைவு ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


சென்னையிலிருந்து விஜயவாடா செல்லும் விரைவு ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா வரை ஜன் சதாப்தி விரைவு ரயில் (வண்டி எண்: 12077) இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2.50 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.
மறுமாா்க்கமாக விஜயவாடாவிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில் (வண்டி எண்: 12078) இரவு 10.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
பராமரிப்புப் பணி காரணமாக, இந்த ரயில் சேவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 11, 12) இரு நாள்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: விஜயவாடாவிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் காலை 6.10 மணிக்கு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12711) இயக்கப்படுகிறது.
மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து விஜயவாடாவுக்கு பிற்பகல் 2.10 மணிக்கு அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12712) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவை, பராமரிப்பு பணி காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 11,12) நெல்லூா்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லூரிலிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...