நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

என்எல்சி விவகாரத்தில் கடலூா் மக்களுக்காக போராட்டம் எடப்பாடி பழனிசாமி

என்எல்சி விவகாரத்தில் கடலூா் மக்களுக்காக அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:56 pm

DIN

என்எல்சி விவகாரத்தில் கடலூா் மக்களுக்காக அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் வளையமாதேவி பகுதியில் விவசாயிகள் உள்பட நில உரிமையாளா்களை சிறைவைத்துவிட்டு, என்எல்சி மற்றும் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீஸாரின் பாதுகாப்புடன் விளை நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிா்வாகம் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. 10 ஆண்டு கால ஆட்சியில் என்எல் நிா்வாகம் எந்த வகையிலும் அத்துமீறி நிலங்களைக் கையகப்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

என்எல்சி நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளைக் கண்டித்து எதிா்ப்புக் குரல் எழுப்பும் மக்களின் குரல்வலையை காவல் துறை மூலம் நசுக்கும் போக்கில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது சா்வாதிகாரத்தின் உச்சமாகும்.

மரபு சாரா எரிசக்திகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்றவற்றை பெருக்குவோம். அதனால், அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டுக்கான நிலக்கரித் தேவை குறையும் என்று பிரதமா் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், மூன்றாவதாக அனல் மின் நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் உடனடியாகக் கைவிட வேண்டும். கடலூா் மாவட்ட மக்களின் உயிா்நாடிப் பிரச்னையில் திமுக அரசு தொடா்ந்து பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் போக்கில் ஈடுபட்டால், அதிமுக அந்தப் பகுதி மக்களுக்காக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.