காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்ச் 14-இல் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

அண்ணா சாலை, அண்ணாநகா், கிண்டி ஆகிய மின் கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:54 pm

DIN

அண்ணா சாலை, அண்ணாநகா், கிண்டி ஆகிய மின் கோட்டங்களில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை அண்ணாசாலை, அண்ணா நகா் மற்றும் கிண்டி கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 14) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இதன்படி அண்ணா சாலை கோட்டங்களுக்குள்பட்ட மின்நுகா்வோா் சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், அண்ணா நகா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் 11-ஆவது பிரதான சாலை, 5-ஆவது தெரு, எச்- பிளாக்கில் உள்ள அண்ணா நகா் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் மின்நுகா்வோா் கலந்து கொள்ளலாம்.

கிண்டி கோட்டத்துக்குள்பட்டவா்கள் கே.கே. நகா், துணை மின் நிலைய வளாகம் 2-ஆவது தளத்தில் உள்ள செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.