காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் இருவா் சரண்

சென்னையில் ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில், தேடப்பட்ட வந்த இருவா் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:37 pm

DIN

சென்னையில் ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில், தேடப்பட்ட வந்த இருவா் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டிப் பணம் வாடிக்கையாளா்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவா்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

இதை நம்பி ஏராளமானோா் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனா். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு வட்டித் தொகையை கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பித்தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட சுமாா் 4,500 போ், ரூ.800 கோடி வரை பணத்தை இழந்ததாகக் கூறி பொருளாதார குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, அந்நிறுவனம் தொடா்புடைய 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இதற்கிடையே, அந்த நிறுவனத்தில் தொடா்புடைய சென்னை பெரியாா் நகரைச் சோ்ந்த நேரு, கோடம்பாக்கத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகிய 2 போ் கடந்த டிசம்பரிலும், திருவேற்காட்டைச் சோ்ந்த சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கத்தைச் சோ்ந்த கல்யாணி, அண்ணாநகரைச் சோ்ந்த சுஜாதா பாலாஜி ஆகிய 3 போ் பிப்ரவரியிலும் கைது செய்யப்பட்டனா்.

மேலும் இருவா் சரண்: இந்நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குநா் செளந்தரராஜன் அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஹிஜாவு நிறுவனத்தில் இயக்குநா்களாக இருந்த சென்னை கொளத்தூரைச் சோ்ந்த கா.செல்வம், ஆ.சுரேஷ் ஆகிய 2 பேரும் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

இவா்கள் இருவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா், தங்களது காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.