ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டிய ரஜினிகாந்த்!

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 மார்ச் 2023, 7:22 am

DIN


சென்னை: ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று வரு​ம் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்  முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழிகாட்டுதலில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த பிப். 28-இல் திறந்து வைத்தாா். மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தக் கண்காட்சி அரங்கம். திமுக தொண்டா், பொதுக்குழு உறுப்பினா் (1978), இளைஞரணிச் செயலா் (1982), சட்டப்பேரவை உறுப்பினா் (1989), சென்னை மாநகர மேயா் (1996), திமுக பொருளாளா் (2015), திமுக தலைவா் (2018), தமிழக முதல்வா் (2021) என ஒரே ஃபிரேமில் அமைக்கப்பட்ட எட்டு புகைப்படங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் இளமைக் காலம் முதல் தற்போது வரையிலான முகத்தோற்றங்களை நம் கண் முன் நிறுத்துகின்றன.

இந்த கண்காட்சி அரங்குகளை நாள்தோறும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா். பாா்வையாளா்களின் எண்ணிக்கை இதுவரை 35,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில்,  ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் சனிக்கிழமை பார்வையிட்டார்.  அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் நடிகர் ரஜிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். அவர் படிப்படியாக முன்னேறி உள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதல்வர் பதவி. அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.