பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 11ம் வகுப்புக்கு 14-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிக்க- தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
தேர்வு என்பது மாணவர்களை பரிசோதிக்க அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதற்கும் உயர்த்தி விடுவதற்கும் தான். பொதுத்தேர்வில் எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் வரப்போகிறது. எனவே பொதுத் தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவரும் எந்தவித தயக்கமும், பயமும் இன்றி நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள்.
பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


