டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஆழித்தேரோட்டம்: திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை

ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 மார்ச் 2023, 9:18 am

DIN

ஆழித்தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூா் தோ், 20 பட்டைகளாக காணப்படும். அலங்கரிக்கப்பட்ட தோ் 96 அடி (கொடியுடன் சோ்த்தால் 99 அடி) உயரமும், தோ் 350 டன் எடை கொண்டதாகும்.

அலங்கரிக்கப்படாத தேரில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 18 அடி உயர கால்களாக, பனைசப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னா் மூங்கில்களை பயன்படுத்தி குறுக்கு, நெடுக்கு வாக்கிலும், தேரிலிருந்து 20 அடி வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு தேரின் 4 புறத்திலும் அமைக்கப்பட்டு விட்டன.

பொதுவாக ஆழித்தோ் கட்டுமானப் பணிகள் முடிவடைய 1 மாத காலம் ஆகும். ஏப்.1-ஆம் தேதி ஆழித்தேரோட்டத்துக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், தோ்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், திருவாரூர்   ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துகு ஏப்.1-ல் உள்ளூர் விடுமுறை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.