சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தலைவணங்குகிறேன்... ஆஸ்கர் வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 மார்ச் 2023, 7:37 am

DIN


ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் திங்கள்கிழமை காலை 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர்  விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து  வருகின்றனர். 

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி எலிஃபன்ட் வில்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றும் கோன்சால்வ்ஸ்க்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். 

மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள பெருமை மிக்க இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.