வாழப்பாடியில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் பலியானார். அவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, மது போதையில் ரயில் பாதையில் நின்ற இளைஞர், ரயில் மோதி பரிதாபமாக பலியானார். இவரைக் காப்பாற்ற முயற்சித்த இவரது நண்பர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காங்கேயன் (22). இவரது நண்பர் சபரி (27). ஆகிய இருவரும் திங்கள்கிழமை பகல் 1.30 மணி அளவில், வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே, சேலம் - விருதாச்சலம் ரயில் பாதையில் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, காரைக்காலில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில், ரயில் பாதையில் நின்றிருந்த இளைஞர் காங்கேயன் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இவரைக் காப்பாற்ற முயற்சித்த இவரது நண்பர் சபரி காயத்துடன் உயிர் தப்பினார். சபரி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக் குறித்து சேலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


