சேலம்: ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சி மருந்து குடித்து விட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம்: ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை முயற்சி
Published on
Updated on
1 min read


சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பூச்சி மருந்து குடித்து விட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம் பாளையம், பச்சியப்பன் காலனி பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி மஞ்சுளா (50). குடும்பப் பிரச்னை காரணமாக   மஞ்சுளா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது வீட்டில் சமைத்த உணவில், பூச்சி மருந்து கலந்துள்ளார். பூச்சி மருந்து கலந்த உணவை மஞ்சுளாவின் மகன் பிரகாஷ்(25) மற்றும் பேத்தி ரோஷினி (12) ஆகியோர்களுக்கு கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுள்ளார்..

இதனை தொடர்ந்து மஞ்சுளா மயக்கமடைந்தவுடன், ரோஷினி போன் மூலம் அம்மா நித்யாவிற்கு தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் பிரகாஷ் மற்றும் ரோஷிணியும் மயக்கம் அடைந்துள்ளனர்.

நித்யா வீட்டிற்கு வந்தவுடன்  3 பேரையும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக சேர்த்த பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எடப்பாடி தனியார் மருத்துவமனையில் மஞ்சுளா, பிரகாஷ், ரோஷினி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை தொடர்ந்து எடப்பாடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மேற்படி நித்யாவிற்கு, பிரகாஷ் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று விவாகரத்து அடைந்த நிலையில், இரண்டாவதாக செல்வம் என்பவரை திருமணம் செய்துள்ளார். அவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு கரோனாவால் இறந்து விட்டார்.

இதற்கிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா கறி குழம்பில் பூச்சி மருந்தை கலக்கி  தன் மகன் மற்றும் பேத்திக்கு கொடுத்து தானும் சாப்பிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com