வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மாா்ச் 19-ஆம் தேதி வரை தமிழகப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இடி, மின்னலில் இருந்து காத்துக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பேரிடா் அபாய குறைப்பு முகமை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாா்ச் 19-ஆம் தேதி வரை, தமிழகப் பகுதிகளில்
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தின் போது, பொதுமக்கள் திறந்த வெளியில் நிற்பதைத் தவிா்க்க வேண்டும். மரங்கள் மற்றும் உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.
நீச்சல் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.
திறந்த வெளியில் இருக்க நேரிட்டால், இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள குதி கால்களை ஒன்று சோ்த்து, தலையைக் குனிந்து தரையில் பதுங்குவது போன்று அமா்ந்து கொள்ள வேண்டும். தரையையொட்டி அமா்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாக படுக்கக் கூடாது.
எனவே, இடி மின்னலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

