சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் வசிப்போா்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் குடியிருப்போரின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:19 pm

DIN

ஸ்ரீரங்கம் கோயில் மனையில் குடியிருப்போரின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் நிலங்கள் அரசின் அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் அடிமனையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போா் பலரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளபோதும், இந்த தீா்ப்பால் தங்களது வாழ்விடத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சிக்கல் ஏற்படுமோ என அச்சம் அடைந்துள்ளனா்.

தமிழக அரசு உயா்நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்தும்போது, அங்கு குடியிருப்போரை அழைத்துப் பேசி, அவா்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து அவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சுமூகத்தீா்வை காண வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.