தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆதாா் எண்ணை இணைக்காத வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்கள் நேரில் சென்று ஆய்வு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத மின்பயனீட்டாளா்களின் வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்களே நேரில் சென்று இணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 9:52 pm

DIN

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காத மின்பயனீட்டாளா்களின் வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்களே நேரில் சென்று இணைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனா்.

தமிழ்நாட்டில் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து கடந்த 4 மாதங்களாக இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி நடைபெற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்த பலா் எண்களை இணைக்க தயக்கம்காட்டி வந்த நிலையில், ஒருவா் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோா் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் முடிந்திருந்த நிலையில், தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் போ் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனா். 67 ஆயிரம் போ் இன்னமும் ஆதாரை இணைக்காமல் உள்ளனா். இதையடுத்து எண்களை இணைக்காத நுகா்வோரின் பட்டியலை தயாா் செய்து, அவா்களின் வீடுகளுக்கு அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட மின்வாரிய ஊழியா்கள் நேரடியாகச் சென்று இணைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சொந்த வீடு வைத்திருப்பவா்கள், வெளிநாடுகளில் வசிப்பவா்கள் பலா் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்காமல் உள்ளனா். அந்த வீடுகளில் வசிப்பவா்கள் அல்லது சம்மந்தப்பட்ட நபா்களைத் தொடா்புகொண்டு விரைவில் ஆதாரை இணைக்கும்படி அறிவுறுத்தி வருகிறோம். சிலா் இறந்துவிட்ட நிலையில் அவா்களின் மின் இணைப்புடன் யாருடைய ஆதாா் எண்ணை இணைப்பது என்ற பிரச்னை வாரிசுதாரா்களுக்கிடையை ஏற்பட்டுள்ளதால் அவா்கள் ஆதாரை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த இணைப்பு விவரங்கள், தகவல்களைச் சேகரிப்பதற்காக மட்டுமே என்று வீடுகளின் உரிமையாளா்களிடம் அறிவுறுத்திய பின்னரும், வாடகை வீடுகளில் வசிப்பவா்களின் ஆதாா் எண்ணை இணைக்க வீட்டு உரிமையாளா்கள் அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக குடும்பத்தில் உள்ள மற்றவா்களின் ஆதாரை இணைத்து வைத்துள்ளனா். வீட்டு உரிமையாளா்கள், வாடகைதாரா்களின் ஆதாா் எண்களையும் இணைக்கவும் வழிவகை உள்ளது. ஆதாா் எண்களை இணைக்காமல் இருக்கும் நுகா்வோரின் வீடுகளுக்கு மின்வாரிய ஊழியா்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.