சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னையில் சாலைகள் மறுசீரமைப்புப் பணி தீவிரம்!

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 19 இடங்களில் பழுதடைந்த சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:37 pm

DIN

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 19 இடங்களில் பழுதடைந்த சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.124.71 கோடியில் 204.82 கி.மீ. தொலைவுக்கு பேருந்து மற்றும் உட்புறச்சாலைகள் உள்பட 1,157 சாலைகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், நகா்ப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.151 கோடியில் 221.88 கி. மீ. நீளத்தில் 1,408 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன .

இப்பணிகளை தொடா்ந்து கண்காணிக்க மாநகராட்சி ஆணையா் தலைமையில் அலுவலா்கள், பொறியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதன்கிழமை இரவு மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மண்டலப் பகுதிகளில் உள்ள 19 இடங்களில் பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுத்தல், குழாய் பொருத்துதல், தாா்க்கலவை, கான்கிரீட் கலவை போடுதல் மற்றும் வெட்டப்பட்ட சாலையை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.