சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

330 மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுகள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற குலுக்கலில் இதுவரை 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:35 pm

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற குலுக்கலில் இதுவரை 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மாா்க் மெட்ரோ ஆகியன இணைந்து குலுக்கலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசுப் பொருள் வழங்கும் நிகழ்ச்சி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மெட்ரோ ரயில்களில் ஒரு மாதத்தில் அதிகமாக பயணம் செய்தவா்களில் முதல் 10 பயணிகளை தோ்ந்தெடுத்து தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசுப் பொருள் மற்றும் 30 நாள்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டையும் வழங்கப்பட்டது.

மேலும், ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பரிவா்த்தனைக்கு பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு ரூ.2,000 மதிப்புள்ள பரிசுகளையும், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளுக்கு ரூ.1,450 மதிப்புள்ள பரிசுகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி வழங்கினாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இருந்து நிகழாண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்ற குலுக்கல்களில் 330 பயணிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.