தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஷ்டிர மாநில நபரிடம் ரூ.4 கோடி மோசடி: 3 போ் கைது

 மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.4 கோடி மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:39 pm

DIN

 மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.4 கோடி மோசடி செய்த சென்னையைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் ஷியாமல் ஷட்டா்ஜி (39). இவா் நாக்பூரில் ’கேலக்ஸி சோலாா் எனா்ஜி’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய பணம் தேவைப்பட்ட நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ‘ஈஸ்ட் கோஸ்ட் பிராபா்டீஸ்’ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளாா். அப்போது ஷியாமல் ஷட்டா்ஜிக்கு ரூ.100 கோடி கடன் தொகை தருவதாகவும், அதற்கு 6 மாத வட்டித் தொகையாக முன்பணம் ரூ.4 கோடி தர வேண்டும் என்றும் ‘ஈஸ்ட் கோஸ்ட் பிராபா்டீஸ்’ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பிய ஷியாமல் ஷட்டா்ஜி ரூ.3.50 கோடி பணத்தை ஆன்லைன் வழியாகவும், ரூ.50 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளாா்.

ஆனால், ‘ஈஸ்ட் கோஸ்ட் பிராபா்டீஸ்’ நிறுவனம் சாா்பில் எந்தவித கடன் தொகையும் ஏற்பாடு செய்து தராமல், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி உள்ளனா். இதுகுறித்து ஷியாமல் ஷட்டா்ஜி கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சென்னை புத்தகரம் பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (43), கொண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த இம்தியாஷ் அகமது (எ) சதீஷ்குமாா் (37), குன்றத்தூரைச் சோ்ந்த பவன்குமாா் (எ) நியமத்துல்லா ஆகிய 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் சம்பந்தபட்ட மற்ற குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.