கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் பலி: கமல்ஹாசன் இரங்கல்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 மார்ச் 2023, 10:44 am

DIN

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் மேஜர் ஜெயந்த் உள்ளிட்ட இரு ராணுவ அதிகாரிகள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

அருணாச்சல பிரதேச மாநிலம், மேற்கு கமெங் மாவட்டத்தின் திராங் அருகேயுள்ள மண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி.ரெட்டி, துணை விமானி ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.  

இதனிடையே மேஜர் ஜெயந்தின் உடல், தில்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு மதுரை கொண்டுவரப்பட்டு, பெரியகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்தில் நாளை அடக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.