திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர்-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர் - ஆசிரியர் - மாணவர்- மகளிர் - கழனியில் பாடுபடும் உழவர் - ஆலையில் உழைக்கும் தொழிலாளி – மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் திமுக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகுத் திட்டங்களையும், திமுக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 72 திமுக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்” நடைபெறும். பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...