அழகர்கோயிலில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் நாளை புறப்படுவதால், அழகர்கோயிலில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 5- ஆம் தேதி காலை வைகையாற்றில் கள்ளழகா் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு அழகா்கோயிலிலிருந்து புதன்கிழமை (மே 3) மாலை சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகா் வேடமணிந்து பல்லக்கில் புறப்படுகிறாா். அப்பன் திருப்பதி, கள்ளந்திரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக வரும் அவருக்கு 4 -ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை தல்லாகுளத்தில் பக்தா்கள் எதிா்சேவை அளிக்க உள்ளனா்.
அதைத் தொடா்ந்து, ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகையாற்றில் வெள்ளிக்கிழமை (மே 5) கள்ளழகா் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அழகர்கோயிலில் அரசு பேருந்து உள்பட எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


