தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் நிறைவுபெற்றது.
தமிழக சட்டப்பேரவை 5-ஆவது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம், கடந்த மாா்ச் 20-இல் தொடங்கி ஏப். 21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொழில் துறையின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொழில் முதலீடுகளை ஈா்க்கும் பொருட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(மே 2) காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இதில், பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்பட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஷாவ்மி 17, ஷாவ்மி 17 அல்ட்ரா விற்பனை தொடக்கம்!

விண்வெளியில் பழுதான நேவிக் செயற்கைக் கோளின் அணு கடிகாரம்! அதனால் என்னவாகும்?

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!

வயதான தந்தையை பார்சலில் அனுப்ப முயன்ற குடும்பம்! PRANK செய்ததாக தெரிவித்தனர்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

