ஐபிஎல் டிக்கெட்: விடியவிடிய மழையில் காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே மழையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்
படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க விடியவிடிய மைதானத்திற்கு வெளியே மழையில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்தாண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தாண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் மைதானம் நிரம்பி வலிந்தன.

இந்நிலையில், வரும் 6-ஆம் தேதி சென்னை, மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நேரடியாக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டிக்கெட்டுகளை வாங்க நேற்று இரவு முதல் கொட்டும் மழையில் விடியவிடிய ரசிகர்கள் காத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், சென்னை அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் படையெடுத்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் நேரடியாக மைதானத்திலும், பேடிஎம் செயலிகள் மூலம் இணையத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டுகள் மைதானத்தின் நேரடி கவுண்டர்களில் மட்டுமே கிடைக்கின்றன. ஆன்லைனில் ரூ. 2,500 முதல் ரூ. 5,000 வரையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com