விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாஜக தலைவர் பதவிக்காக ஆளுநர் வந்துள்ளாரா? தங்கம் தென்னரசு

ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்கு வந்தவர் போலத்தான் உணர முடிகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

News image

தங்கம் தென்னரசு (கோப்புப் படம்)

Updated On :4 மே 2023, 1:54 pm

ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்கு வந்தவர் போலத்தான் உணர முடிகிறது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ்பவனில் அமர்ந்து அரசியல் செய்கிறார் என்றும் சாடியுள்ளார்.

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்ததற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆளுநரின் உரைகள் மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளது என்பதே உண்மை. கனியாமூரில் நடந்த வன்முறையை துப்பாக்கிச்சூடு இன்றி கட்டுப்படுத்தினோம் என்பதே முதன்மையானது. 

கோவை  உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 

ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிட மாடலுக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார், சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார்.
 
ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி செய்கிறார்; சனாதன வகுப்பெடுக்கிறார். அரசு எழுதித்தந்ததை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதே விதி, அதுதான் நடைமுறை. அரசு எடுத்த முயற்சிகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சி அரசியல் தலைவர் போல ஆளுநர் பேசுகிறார். 

ஆளுநரிடம் இன்னும் 17 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.  ஆளுநர் மாளிகை நிதி தொடர்பாக நிதியமைச்சர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என விமர்சித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.