தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு அதிர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

முதல்வர் ஸ்டாலின் 

Updated On :4 மே 2023, 9:00 am

DIN

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திர வீரா்களும் வீராங்கனைகளும் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த 12 நாள்களாக இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது தில்லி காவல்துறை உடை அணிந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

“தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது பிரதமர் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார். ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.