
அன்னவாசல் அருகே வீட்டின் முன் பெண் சடலம் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கடந்த 29 ஆம் தேதி 8 மாத கர்ப்பிணி நாகேஸ்வரி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர் அரவிந்த், மாமியார் விஜயா, மாமனார் தங்கமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த நாகேஸ்வரியின் சடலத்தை விளாபட்டி மேட்டுகளத்தில் உள்ள அவரது கணவர் அரவிந்தன் வீட்டு வாசலில் நாகேஸ்வரியின் உறவினர்கள் புதைத்து சென்றனர்.
அத்துமீறி சடலத்தை புதைத்ததாகவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அன்னவாசல் காவல் நிலையத்தில் விஜயா சகோதரர் பால்ராஜ் அளித்த புகாரில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதைக்கப்பட்ட சடலம் வீட்டு வாசல் முன் புதைக்கப்பட்ட நிலையில் அதே இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.