சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகும் முடிவை சரத் பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், தேசிய அரசியல் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மிக மூத்த தலைவர்களின் ஒருவரான சரத் பவார், மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் தனது தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 35 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பதவிகளை வகித்த சரத் பவார், கடந்த 1999-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.
இந்நிலையில், தனது சுயசரிதை புத்தகத்தின் இரண்டாவது பாகம் வெளியீட்டு விழாவின்போது பேசிய சரத் பவார், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று காலை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...