தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து!

ராணிப்பேட்டை அருகே சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை  தடுப்பு மீது  மோதி விபத்துக்குள்ளானது.
தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி கன்டெய்னர் லாரி விபத்து!

ராணிப்பேட்டை அருகே சென்னையில் இருந்து சரக்கு ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி தேசிய நெடுஞ்சாலை  தடுப்பு மீது  மோதி விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே உள்ள ஆட்டோ நகர் பகுதியில், சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு பெங்களூர் குண்டூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவரை இடித்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திருவலம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் விக்டர் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  நெடுஞ்சாலை காவல் துறையினர்  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை பொக்லைன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

மேலும் விபத்து காரணமாக சென்னை சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஊர்ந்து  சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com