புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய தொடங்கியது.

News image
கோப்புப்படம்
Updated On :8 மே 2023, 3:31 am

DIN

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய தொடங்கியது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாள்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 5 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6712 கன அடியாக அதிகரித்தது.

தற்போது, காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 6595 கன அடியாகவும், நேற்று காலை வினாடிக்கு 6295 கன அடியாகவும் சரிந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை வினாடிக்கு 4906 கன அடியாக சரிந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 102.54 அடியிலிருந்து 102.74 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.43 டி.எம்.சி. ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.