
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழக ஆளுநரை மூத்த அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்திக்கிறார்.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது பல்வேறு முக்கிய பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் இன்று நேரில் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.