ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!இவ்விரு நாடுகளிலும் விவாகரத்து சட்டப்படி குற்றம்! பிறகு?உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின் மீது தவெக புகார்கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அரசுப்பணி! உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அரசுப்பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

Published On :

பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அரசுப்பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பாப்பாத்தி இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலை பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து தனது குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது வேலைவாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தார். 

பாப்பாத்தியின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணி நியமனம் வழங்கிட ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து,  இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணையினை வழங்கினார்.

அப்போது இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்  ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.