ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ரிசார்ட் இணையத் தொடரின் படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ரிசார்ட் இணையத் தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இந்தத் தொடர் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது.
முறையாக கல்வி கற்காத நாயகன், சமையல்கலை மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த செஃப் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இத்தொடரை, 'எருமை சாணி' புகழ் விஜய் குமார் எழுதி நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடரின் எதிர்மறை பாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் அபினேயா நேத்ரன், தர்ஷனா, படவா கோபி, அமர் கீர்த்தி, சாய் தன்யா, விஷ்ணு பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமின்றி, பலதரப்பட்ட மக்களும் இந்தத் தொடரை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரிசார்ட் இணையத் தொடரின் படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால், இந்தத் தொடரில் கூடிய முடிவடையவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரிசார்ட் தொடரின் அடுத்த சீசன் குறித்த வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Filming for the web series Resort, currently streaming on the JioHotstar OTT platform, has concluded.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







