திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவு!

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

News image

எல்பிடபுள்யூ இணையத் தொடர். - படம்: எக்ஸ்

Updated On :23 ஜூலை 2026, 3:32 pm IST

நடிகர் விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வியாழன்தோறும் எல்பிடபிள்யூ இணையத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கியிருந்தார். ‘ஹார்ட் பீட்’ தொடரை தயாரிக்கும் அட்லீ பேக்டரி நிறுவனம் இந்தத் தொடரையும் தயாரித்து வந்தது.

மேலும், இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்‌ஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த விக்ராந்த், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக எப்படி வென்றார் என்பதை மையப்படுத்தி எல்பிடபுள்யூ தொடர் எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர், இந்த வார எபிசோடுகளுடன் இன்று(ஜூலை 23) நிறைவடைந்தது.

அடுத்த வாரம் வியாழந்தோறும் ஹார்ட் பீட் தொடரின் 3 ஆம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Actor Vikranth's web series 'LBW' concluded with 120 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.