மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஹார்ட் பீட் - 3: இனி இவர்கள் வரமாட்டார்கள்! யார் யார்?

ஹார்ட் பீட் - 3 தொடரில் இருந்து விலகிய பாடினி குமார், ஆர்ஜி ராம் குறித்து...

heart beat

ஹார்ட் பீட் தொடர் நடிகர்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையத் தொடரான ஹார்ட் பீட் மூன்றாம் பாகத்தில் தொடரப்போவதில்லை என்று ஆர்ஜி ராம், பாடினி குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகம் நாளை(ஜூலை 30) முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு பாகங்களில் தேஜு பாத்திரத்தில் நடித்த நடிகை யோகலட்சுமி, மூன்றாவது சீசனில் தான் தொடரவில்லை என்று முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3வது சீசனில் அனிதா பாத்திரத்தில் நடித்து வந்த பாடினி குமார், நவீன் பாத்திரத்தில் நடித்து வந்த ஆர்ஜிராம் ஆகியோர் இந்தப் புதிய சீசனில் தொடரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

நடிகை பாடினி குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”இரண்டு சீசன்கள். எண்ணற்ற நினைவுகள். நான் எப்போதும் போற்றும் ஒரு கதாபாத்திரம்.

ஹார்ட் பீட் தொடரில் அனிதா என்ற பாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இந்தப் பயணத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய அனைத்து நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

அனிதாவிற்கு இது விடைபெறும் தருணமாக இருக்கலாம், ஆனால் அவளுடனான நினைவுகள் என்னுடன் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, ஆர்ஜிராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “டாக்டர் நவீன், ஹார்ட் பீட் இணையத் தொடரில் இருந்து விடைபெறுகிறார், நானும் உங்களைப் போல வியாழக்கிழமை எபிசோடுகளுக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து, ஹார்ட் பீட் தொடரில் குணா பாத்திரத்தில் நடித்து வந்த சர்வாவும், மூன்றாவது சீசனில் தொடரப்போவதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Summary

RG Ram and padini Kumar have announced that the popular web series Heart Beat will not continue into a third season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.