FOLLOW US

ON GOOGLE DISCOVER

திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

ஹார்ட் பீட் தொடரில் தேஜு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹார்ட் பீட் தொடரில் இருந்து விலகிய நடிகை யோகலட்சுமி.

News image
Updated On :23 ஜூலை 2026, 4:07 pm IST

ஹார்ட் பீட் இணையத் தொடரில் இருந்து நடிகை யோகலட்சுமி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகம் வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரில் முதல் இரண்டு பாகங்களில் தேஜஸ்ரீ என்ற தேஜு பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை யோகலட்சுமி. ஹார்ட் பீட் தொடரில் தன்னுடைய துணிச்சலான மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து, இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், ஹார்ட் பீட் தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள பதிவில், “இதை ஏற்றுக்கொள்வது கடினம் என்று எனக்குத் தெரியும்.

உண்மையிலேயே வருந்துகிறேன் நண்பர்களே. கனத்த இதயத்துடன் நான் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிறேன். இனி நான் ஹார்ட் பீட் தொடரில் நடிக்கப்போவதில்லை.

எனக்கும் இந்த முடிவு எளிதாக இருக்கவில்லை, ஆனால் இந்த வாய்ப்பிற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், எல்லாவற்றிற்கும், தேஜுவுக்கு நன்றி.

இந்தப் பயணத்தை அழகானதாக மாற்றிய ஹார்ட் பீட் தொடர் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

தேஜுவின் சிறப்பு என்னவென்றால், அவள் பல பெண்களுக்கு உத்வேகம் அளித்து, மிகுந்த அன்பையும் மரியாதையையும் பெற்றாள்.

தேஜுவின் பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். என் பயணத்தை, இவ்வளவு சிறப்பான பகுதியாக மாறியதற்கு நன்றி, தேஜு” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹார்ட் பீட் தொடரில் நடிகை யோகாலட்சுமி விலகியது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Actress Yogalakshmi has announced her departure from the web series 'Heart Beat'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.