டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ஹார்ட் பீட் தொடரில் இணையும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை!

ஹார்ட் பீட் தொடரில் இணையும் நடிகை காயு ஸ்ரீ குறித்து...

News image

நடிகை காயு ஸ்ரீ - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :20 ஜூலை 2026, 4:18 pm IST

ஹார்ட் பீட் தொடரின் மூன்றாம் பாகத்தின், ஆஹா கல்யாணம் நடிகை காயு ஸ்ரீ இணைந்துள்ளார்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் ஹார்ட் பீட் - 3 தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியான நிலையில், இந்த விடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, புதியவர்களும் மூன்றாவது சீசனில் இணைந்துள்ள நிலையில், ஆஹா கல்யாணம் நடிகை காயு ஸ்ரீ புதிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

யார் இந்த காயு ஸ்ரீ?

ஆஹா கல்யாணம் தொடரில் ஐஸ்வர்யா பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை காயு ஸ்ரீ. இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமாங்கல்யம் தொடரிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் காயு ஸ்ரீ.

Summary

Actress Kayu Sri from Aaha Kalyanam has joined the cast of the third season of the Heart Beat series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.